search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்.சி.சி மாணவர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங்
    X
    என்.சி.சி மாணவர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங்

    ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்- ராஜ்நாத் சிங் அறிவுரை

    புதியதை உருவாக்கி நாட்டை பெருமையடைய செய்யுங்கள் என ராஜ்நாத் சிங் கூறினார்.
    புது டெல்லி:

    என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

    இந்த ஆண்டு குடியரசு தின முகாமில் பங்கேற்கவுள்ள என்சிசி மாணவர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:-

    என்.சி.சி அமைப்பு இளைஞா்களை பல துறைகளில் திறமை மிக்கவா்களாகவும், மனித நேயம் கொண்டவா்களாகவும், சிறந்த மனிதா்களாகவும் மாற்றி வருகிறது. 

    அந்த அமைப்பில் உள்ள மாணவர்களுக்கு புதிய பாதையை தோ்வு செய்து, சமூகத்திற்கு புதிய திசையை காட்டும் நற்பண்புகளை ஊட்டி வருகிறது.

    என்.சி.சி மாணவர்கள் அனைவரும் பிராந்தியம், மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றம் என்னும் புதிய உதயத்துக்காக சேவையாற்ற வேண்டும். ஆண்,பெண் பாகுபாடற்ற சமத்துவத்தை நம் நாட்டில் உருவாக்க வேண்டியது அவசியம். 

    மாறிவரும் காலத்துக்கு ஏற்ப, இந்திய பண்பாட்டு விழுமியங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.

    என்.சி.சி மாணவர்கள் சிங்கங்கள். தூய்மையான ஆன்மாக்கள். பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுக்குள் உள்ளது என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நீங்கள் உணர வேண்டும். 

    பெரிதாக கனவு காணுங்கள். தடைகளை தவிடு பொடியாக்குங்கள். இலக்குகளை நோக்கி பயணித்து, உயர்ந்த, புதியதை உருவாக்கி நாட்டை பெருமிதம் கொள்ளச் செய்யுங்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

    Next Story
    ×