search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி
    X
    உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி

    உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்தால் வேலை வாய்ப்புக்கான காலண்டர் உருவாக்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி

    வேலைக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செயல்முறை முடிவடைவதை இது உறுதி செய்யும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில்  40 சதவீத இடங்களை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி  கட்சி உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 125 பேர் கொண்ட முதல் பட்டியலில் 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.  இரண்டாவது பட்டியலில் 16 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்  வேலை வாய்ப்புக்கான காலண்டர் உருவாக்கப்படும் என்று அக்கட்சி  தெரிவித்துள்ளது. இந்த காலண்டரில் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், நேர்காணல்கள் மற்றும் நியமனங்கள் தேதிகள் இடம் பெற்றிருக்கும். வேலை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செயல்முறை முடிவடைவதை இது உறுதி செய்யும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. 

    மேலும் கூ ஆப்பில் வேலை நாட்காட்டி பற்றிய சில விவரங்களையும் அந்த கட்சி பகிர்ந்துள்ளது. இதேபோல் மாநில காவல் துறையில் ஒரு லட்சம் பணியிடங்களை நிரப்பப்படும் என்றும்,  ஆர்வமுள்ள மருத்துவர்களுக்கான 6000 பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியிடப்படும் என்றும்,  காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×