search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அகிலேஷ் யாதவ்

    மெயின்புரி தனக்கு பாதுகாப்பான இடம் என்பது சமாஜ்வாடி கட்சி தலைவரின் தவறான கணிப்பு என பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்தார்.
    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். உத்தரபிரதேச தேர்தலில் அவர் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் வர்மா கூறி உள்ளார்.

    ஆசம்கர் தொகுதி எம்.பி.யான அகிலேஷ் யாதவ், தனது பாராளுமன்ற தொகுதி மக்களிடம் கருத்தை கேட்டறிந்துவிட்டு, அதன்பின்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்வதாக கூறியிருந்தார். இதையடுத்து, அவர் கர்ஹால் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியின் மெயின்புரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக விளங்கும் மெயின்புரில், கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017 சட்டசபை தேர்தலில் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சோப்ரான் யாதவ் 1.04 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பிரேம் ஷக்யா 38,405 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். 

    இதுபற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், மெயின்புரி தனக்கு பாதுகாப்பான இடம் என்பது சமாஜ்வாடி கட்சி தலைவரின் தவறான கணிப்பு என்றார். அந்த கணிப்பை நாங்கள் பொய்யாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    பிப்ரவரி 20ம்தேதி கர்ஹால் தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது. அகிலேஷ் யாதவ் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், கட்சியினர் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். இதற்கு முன்பு அகிலேஷ் யாதவ் 2012ம் ஆண்டில் இருந்து 2017 வரை முதல்வராக இருந்தபோது, சட்டமேலவை உறுப்பினர் ஆகி பதவியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×