search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி மலைப்பாதை
    X
    திருப்பதி மலைப்பாதை

    திருப்பதியில் சேதமடைந்த மலைப்பாதையில் இன்று முதல் வாகன போக்குவரத்து

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
    திருப்பதி:

    கடந்த அக்டோபர் மாதம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கடப்பா, ஆனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருப்பதியிலும் பலத்த மழை கொட்டியது.

    திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்தன. பாறைகள் உருண்டு விழுந்ததில் மலைப்பகுதி சேதமடைந்தது.

    இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் 1-வது மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    சேதமடைந்த மலைப்பாதையை டெல்லி, சென்னை, ஐதராபாத்தை சேர்ந்த ஐ.ஐ.டி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலை சீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனை வழங்கினர்.

    சாலையை முழுமையாக சீரமைக்க 3 மாத காலம் ஆகும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சேதமடைந்த மலைப்பாதையை திருப்பதி தேவஸ்தான என்ஜினீயர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மலைப்பாதை சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    இதையடுத்து இன்று முதல் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து ஒத்திகை நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இன்று இரவு முதல் மலைப்பாதையில் வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே வாகன போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மலைப்பாதை போக்குவரத்திற்கு திறந்து விடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×