search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ்
    X
    திரிணாமுல் காங்கிரஸ்

    உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறார்கள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
    நாகாலாந்தில் சுரங்கத்தில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் என நினைத்து எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 13 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் அசாம் ரைபிள் முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது வீரர்கள் வன்முறை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும்போது, ஒருவர் உயிரிழந்தார். மேலும், சம்பவத்தின்போது பொதுமக்கள் தாக்குதலில் ஒரு வீரர் பலியானார்.

    இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உயர் விசாரணை குழு அமைப்பட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் உயிரிழந்த பொதுமக்கள் குடும்பத்தினருக்கு போதுமான அளவு இழப்பீடு வழங்குவது குறித்தும், ஆயுதப்படைக்கான அதிகாரம் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்த இருக்கிறார்கள்.

    இன்று ஐந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள். அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார்கள்.
    Next Story
    ×