என் மலர்

  செய்திகள்

  துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு
  X
  துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு

  டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு தனியார் துறை பங்களிப்பு அவசியம்-துணை ஜனாதிபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து பிரிவினரின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் மகிழ்ச்சியைத் தரும் யோசனைகளை கொண்டு வாருங்கள் என்று துணை ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.
  பெங்களூரு:

  ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாக கருதப்படும் 24-வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாட்டை குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு  தொடங்கி வைத்தார்.

  கர்நாடகா அரசின் மின்னணுவியல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சி.என். அஷ்வத் நாராயண், தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

  இந்நிகழ்ச்சியில், நாட்டின் டிஜட்டல் மற்றும் தொழில்நுட்பம் மாற்றத்திற்கு தனியார் துறை பங்களிப்பும் அவசியம் என்று வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நம் நாடு முன்னேறி செல்கிறது. ஆதார் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். வரும் நாட்களில் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதுமைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.  கொள்கைகள் மற்றும் திட்டங்களை நாடாளுமன்றம் முடிவு செய்தாலும், முடிவில் மக்களிடையே திட்டம் எந்தளவுக்கு சென்றடைகிறது என்பது தான் முக்கியம்.

  அனைத்து பிரிவினரின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் மகிழ்ச்சியைத் தரும் யோசனைகளை கொண்டு வாருங்கள்.

  அரசாங்கம் தலைமையிலான முயற்சிகள் முக்கியமானவை. தனியார் துறையின் பங்கேற்பையும் நான் வலியுறுத்துகிறேன். மேலும், வேலைகளை உருவாக்குவது, புதுமையான பயன்பாடுகளை உருவாக்குவது, நாட்டில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×