என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  திருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு கொரோனா- ஊழியர்கள் கலக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி தேவஸ்தான அதிகாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் விழாக்களில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

  திருப்பதி:

  திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலராக இருப்பவர் தர்மாரெட்டி. இவருக்கு தீபாவளி தினத்தன்று கடுமையான சளி இருமல் காய்ச்சல் ஏற்பட்டது.

  இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் தர்மா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் கண்ணாடி அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  கொரோனா பரிசோதனை

  சாமி தரிசனத்திற்கு வந்த முக்கிய பிரமுகர்களுக்கு தர்மா ரெட்டி பிரசாதங்களை வழங்கியுள்ளார்.

  தற்போது தர்மா ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் விழாக்களில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தர்மா ரெட்டியை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் கருணாகர ரெட்டி, சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி ஆகியோர் கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து நலம் விசாரித்தனர்.

  Next Story
  ×