search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
    X
    மழைநீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

    கனமழை நீடிப்பு- கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சரின் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சரின் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக மோசமான வானிலையுடன் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×