search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா (கோப்புப்படம்)
    X
    ஏர் இந்தியா (கோப்புப்படம்)

    ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்: மத்திய அரசு

    நஷ்டத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடா வாங்கியிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பில் இயங்கும் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டின.

    டாடா உள்ளிட்ட ஒன்றிரண்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.

    ஏர் இந்தியா (கோப்புப்படம்)

    இந்த நிலையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியிருப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×