search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்றம்
    X
    உச்சநீதிமன்றம்

    10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு மருத்துவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. சில மாநிலங்கள் இதற்கு வரவேற்பு அளித்தாலும் பெரும்பாலான மாநிலங்கள் இதை எதிர்த்தது.

    ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

    Next Story
    ×