என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் மட்டுமே செயல்படும் ஓலா தொழிற்சாலை - 10000 பேருக்கு வேலை
Byமாலை மலர்13 Sep 2021 9:04 PM GMT (Updated: 13 Sep 2021 9:04 PM GMT)
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-S1 அறிமுகம் மற்றும் விலையை கடந்த மாதம் அறிவித்தது.
ஓசூர்:
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
அதில், ஓலாவின் ஃப்யூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். இங்கு 10,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பாக அகர்வால் வெளியிட்டுள்ள டுவிட்டரில், “தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த வாரத்தின் முதல் தொகுதியை நாங்கள் வரவேற்றோம். இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்ஜி மோட்டார்
Next Story
×