search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்
    X
    டாக்டர்

    கேரளாவில் தொடரும் சம்பவங்கள்- டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

    திருவனந்தபுரத்தில் சமீபத்தில் ஒரு பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் சிலர் சமீபத்தில் தாக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரத்தில் சமீபத்தில் ஒரு பெண் டாக்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக சேவையாற்றி வரும் டாக்டர்கள் தாக்கப்படுவது அதிர்ச்சியை தருவதாகவும், பெண் டாக்டர் ஒருவர் தாக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள பிரிவு தலைவர் சக்கரியாஸ், செயலாளர் கோபிகுமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் டாக்டர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெண் டாக்டர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். இதனை பொறுத்து கொள்ள முடியாது. டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் டாக்டர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×