search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்

    அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் பிரசவத்திற்கு சென்ற பெண் கழிவறையில் குழந்தை பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். பிரவீன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் குன்னமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் இருந்த போது அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்தது. இதனால் வலியில் அலறிய அவரது சத்தம் கேட்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

    அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இது பற்றி பெண்ணின் உறவினர்கள் மருத்துவ துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் பிரசவத்திற்கு சென்ற பெண் கழிவறையில் குழந்தை பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மருத்துவ உயர் அதிகாரிகள், குன்னமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×