search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய்: மத்திய நிதியமைச்சகம் தகவல்

    கடந்த 8 மாதங்களுக்கு பிறகு ஜிஎஸ்டி மாத வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
    மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. கடந்த மாதம் (ஜூன்) மொத்த ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஜூன் 5-ந்தேதி முதுல் ஜூலை 5-ந்தேதி வரையிலான உள்நாட்டு பரிவர்த்தனைகளும் அடங்கும்.

    கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு பின்னர், வரி செலுத்துவோருக்கு பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் வழங்கப்பட்டன.

    கடந்த 8 மாதங்களாக மாத ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்த நிலையில், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது.
    Next Story
    ×