search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஹஜ் பயண விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து - இந்திய ஹஜ் கமிட்டி

    கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, சவுதி அரேபியாவில் வசிப்பவர்களை மட்டும் குறைவான எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு இந்திய முஸ்லிம்கள் ஏராளமானோர் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை சென்று வருகிறார்கள். ஆனால், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி நேற்று அறிவித்தது.

    இதுகுறித்து இந்திய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி மக்சூத் அகமதுகான் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோப்புப்படம்


    கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, சவுதி அரேபியாவில் வசிப்பவர்களை மட்டும் குறைவான எண்ணிக்கையில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் பங்கேற்க அனுமதிப்பது என்று சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சர்வதேச ஹஜ் யாத்திரையை ரத்து செய்துள்ளது.

    ஆகவே, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனைத்தையும் ரத்து செய்வது என்று இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சவுதி அரேபிய அரசு வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டும் இந்திய முஸ்லிம்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது.
    Next Story
    ×