search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு - தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் முதலிடம்

    கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் இருந்து மாநிலங்களின் பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது 3வது முறையாக 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

    அதில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசை பட்டியலில் உயரிய இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகின்றன. 

    அந்த அடிப்படையில் தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் செயல்பாட்டிற்கு A++ என்ற தர குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி, மணிப்பூர், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த ஆண்டை விட தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×