search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    மூடப்பட்ட மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

    டவ்தே புயலால் மூடப்பட்ட மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் இரவு 10 மணி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
    மும்பை:

    அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ள டவ்தே புயல் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயலால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ததுடன், பெருமளவில் சேதங்களையும் ஏற்படுத்தி சென்றுள்ளது.

    கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. எர்ணாகுளம், ருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி நேற்று 2 பேர் உயிரிழந்தனர்.

    கர்நாடகாவில் டவ்தே புயலால் நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.  6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 73 கிராமங்கள் பாதிப்படைந்து உள்ளன.

    குஜராத்தில் புயலை எதிர்கொள்ள, தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அரசு மாற்றி வருகிறது.

    இதேபோன்று, டவ் தே புயலால் மகாராஷ்டிராவில் ஜல்காவன் நகரில் அஞ்சல்வாடி பகுதியில் 2 சகோதரிகள் உள்பட 6 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

    புயலால் தடுப்பூசி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள, ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவற்றை சேர்ந்த மீட்பு குழு மற்றும் நிவாரண குழுவினர், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    சாலைகளில் வெள்ளம்

    தேசிய பேரிடர் மீட்புப் படையின் 79 குழுக்கள் புயல் கடந்து செல்லும் மாநிலங்களில் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.  அவசர தேவைக்காக கூடுதலாக 22 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

    இந்தப் புயலால் மும்பை நகரம் பலத்த சேதமடைந்துள்ளது.  புயல் கடந்து செல்லும்பொழுது மும்பை நகரில் சிவசேனா பவன் அருகே இருந்த மரங்களும் மற்றும் மின் கம்பம் ஒன்றும் அடியோடு சாய்ந்து விழுந்தன.

    மும்பையின் ஜுஹு பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ள நீர் தெருக்களில் தேங்கி காணப்படுகிறது.  பல்வேறு பகுதிகளிலும் கனமழை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  மும்பை நகரில் அரபிக்கடல் கடும் சீற்றமுடன் காணப்படுகிறது. அலைகள் பல மீட்டர் உயரம் வரை கரையில் எழும்பி வீசி வருகிறது.

    மும்பை விமான நிலையம் இன்று காலை 11 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மூடப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது.  அதன்பின் இந்த அறிவிப்பு மாலை 4 மணிவரை நீட்டிக்கப்பட்டது. புயல் பாதிப்பு தீவிரமடைந்ததால் மாலை 6 மணிவரை மும்பை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பின்பு 8 மணிவரையும், பின்னர் 10 மணிவரையும் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் இன்றிரவு 10 மணியில் இருந்து மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
    Next Story
    ×