search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல்- கேரளாவில் 15ந் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு

    கேரளாவில் புயல் தாக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடல் கொந்தளிப்பு இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் தென்கிழக்கு அரபிக்கடலில் வருகிற 14-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    14-ந் தேதி காலையில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு , வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் தீவிரமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    15-ந் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து , மத்திய கிழக்கு அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும். அப்போது இது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

    இந்த புயலுக்கு தாக்டே என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    கேரளாவில் புயல் தாக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடல் கொந்தளிப்பு இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

    மழை

    தாக்டே புயல் காரணமாக கேரளாவில் இன்று தொடங்கும் மழை வருகிற 15-ந் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, மலப்புரம் உள்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    எனவே இங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
    Next Story
    ×