search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி, மோடி
    X
    மம்தா பானர்ஜி, மோடி

    மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைப்பது யார்?: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவரம்

    பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.
    தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

    அதில் பெரும்பாலானவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.

    ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் திரணாமுல் காங்கிரஸ் 128 முதல் 138 இடங்களையும் இடங்களை பிடிக்கும் எனத்தெரிவித்துள்ளது.

    ஏபிபி நியூஸ்- சி வோட்டர்- திரணாமுல் காங்கிரஸ் 152 முதல் 164 இடங்களையும், பா.ஜனதா 109 முதல் 121 இடங்களையும் பிடிக்கும் எனவும், 

    பி-மார்க் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 172 இடங்களையும், பா.ஜனதா 112 முதல் 132 இடங்களையும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×