search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு -எடியூரப்பா அறிவிப்பு

    கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு அத்தியாவசிய சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றன.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 4-ந் தேதி வரை வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. 

    எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. எனவே, ஊரடங்கை நீடிப்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது. இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் முழு ஊரடங்கை மாநிலம் முழுவதும்  நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். நாளை இரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

    அத்தியாவசிய சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றன. காலை 10 மணிக்குப் பிறகு கடைகள் மூடப்படும். கட்டுமானப் பணிகள், உற்பத்தி மற்றும் விவசாயப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பொது போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என எடியுரப்பா கூறினார்.
    Next Story
    ×