search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் - நாளை 7வது கட்ட வாக்குப்பதிவு

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 223 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நாளை 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தாமன், தக்ஷின் தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.

    மம்தா பானர்ஜி

    தேர்தல் பிரசாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்துவதை கைவிட்டுள்ளன. பிரதமர் மோடி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பொதுக்கூட்டங்களை ரத்து செய்துவிட்டனர்.

    இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. எட்டு கட்டங்களாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2-ம் தேதி நடக்கிறது.
    Next Story
    ×