search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

    பக்தர்கள் ஆரவாரம் குறைந்துள்ளதால் திருப்பதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளை விட்டு விலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது.
    திருப்பதி:

    கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருமலைக்கு வரும் பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு திரும்பி சென்று விடுகின்றனர். அதனால் ஏழுமலையான் கோவில் சார்ந்த பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் பக்தர்களின் நடமாட்டம் உள்ளது. இதனால் முக்கிய பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளது. பாபவிநாசம், ஆகாசகங்கை, ஜபாலி தீர்த்தம், ஸ்ரீவாரி பாதாளு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பக்தர்கள் செல்லவில்லை. இதனால் அந்த பகுதிகளும் வெறிச்சோடி கிடக்கிறது.

    பக்தர்கள் ஆரவாரம் குறைந்துள்ளதால் திருப்பதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளை விட்டு விலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது.

    பாலாஜி நகர் பகுதியில் இரவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. இதனை பார்த்த மக்கள் அச்சமடைந்து கூச்சலிட்டதால் சிறுத்தை அந்த இடத்திலிருந்து காட்டிற்குள் ஓடியது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் மக்கள் புகார் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து அப்பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இரவு நேரங்களில் தனியாக வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் திருமலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த ஊரடங்கு காலத்திலும் வன விலங்குகள் அதிகளவில் கோவில் வளாக பகுதிகளில் சுற்றி திரிந்தது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×