search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனில் தேஷ்முக்
    X
    அனில் தேஷ்முக்

    ரூ.100 கோடி லஞ்சப் புகார்... மகாராஷ்டிரா முன்னாள் மந்திரியிடம் சிபிஐ தீவிர விசாரணை

    சிபிஐ விசாரணைக்கு எதிராக அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான லஞ்சப் புகார் குறித்து சிபிஐ விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, சிபிஐ விசாரணையை தொடங்கியது.

    சிபிஐ

    விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்பேரில், இன்று காலை மும்பை சான்டாகுரூஸ் பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகைக்கு வந்து, சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் அனில் தேஷ்முக். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர் அளிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அனில் தேஷ்முக் மீது புகார் கொடுத்த முன்னாள் கமிஷனர் பரம் பீர் சிங், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசே, துணை கமிஷனர் ராஜு புஜ்பால், உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீல், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ பாட்டீல், ஓட்டல் உரிமையாளர் மகேஷ் ஷெட்டி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 
    Next Story
    ×