search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    பெங்களூருவில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.9.46 கோடி அபராதம் வசூல்

    கடந்த ஆண்டு முதல் தற்போது வரை பெங்களூருவில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.9.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2020) முதல் தற்போது வரை பெங்களூருவில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.9.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி, பெங்களூருவில் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 917 பேர் சிக்கி இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 90 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுபோல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக 25 ஆயிரத்து 73 பேர் சிக்கி இருப்பதும், அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சத்து 95 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×