search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களித்த முதியோர்
    X
    வாக்களித்த முதியோர்

    மேற்குவங்காள சட்டசபை தேர்தல்: 2-ம் கட்ட தேர்தலில் 80.43 சதவீத வாக்குப்பதிவு

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் முதற்கட்ட தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 84.5 சதவீத வாக்குகள் பதிவானது.
    மேற்கு வங்காளத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.

    மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 84.5 சதவீத வாக்குகள் பதிவானது. இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி- சுவெந்து அதிகாரி ஆகியோர் நேருக்குநேர் மோதும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும்.

    வாக்குச்சாவடி

    மாலை 6 மணி முடிவில் மேற்கு வங்காளத்தில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×