search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொற்கோவிலில் பாகிஸ்தான் சிந்து நதி ஆணையருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது
    X
    பொற்கோவிலில் பாகிஸ்தான் சிந்து நதி ஆணையருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது

    பொற்கோவிலுக்கு வருகை தந்த பாகிஸ்தான் சிந்து நதி ஆணைய குழு

    சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்திலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என பாகிஸ்தான் ஆணையர் நம்பிக்கை தெரிவித்தார்.
    அமிர்தசரஸ்:


    சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பான நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது. பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையர் சையத் முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழு, இந்தியாவின் சிந்து நதி ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து நதி ஆணைய குழுவினர் இன்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பாகிஸ்தான் ஆணையருக்கு நினைவுப்பரிவு வழங்கி கவுரவித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ஆணையர், எதிர்காலத்திலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என நம்பிக்கை  தெரிவித்தார். பொற்கோவிலுக்கு வந்தது அற்புதமான அனுபவம் என்றும் அவர் கூறினார். 
    Next Story
    ×