என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக-வை தோற்கடியுங்கள் என மக்களிடம் வலியுறுத்துவோம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
Byமாலை மலர்2 March 2021 1:22 PM GMT (Updated: 2 March 2021 4:02 PM GMT)
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாயிகள் சார்பில் பா.ஜனதாவை தோற்கடிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வோம் என விவசாய சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும் மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பிர் எஸ் ரஜேவால் கூறுகையில் ‘‘தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளம், கேரள மாநிலங்களுக்கு நாங்கள் குழுக்களை அனுப்புவோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆனால், மக்களிடம் பா.ஜனதாவை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர்களுக்கு வாக்கு அளியுங்கள் என வலியுறுத்துவோம். விவசாயிகளிடம் மோடி அரசு காட்டும் அணுகுமுறை குறித்து கூறுவோம்’’ என்றார்.
ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் கூறுகையில் ‘‘பா.ஜனதாவை தண்டிக்க வேண்டும் என தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மக்களிடம் எடுத்துரைப்போம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் செல்வோம். மார்ச் 12-ந்தேதி கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்துடன் நடைபெறும்’’ என்றார்.
Next Story
×