search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸி. உறவு முக்கிய பங்கு வகிக்கும் -மோடி

    கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான வலிமையான உறவு முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம், நாட்டின் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ‘இந்தியா-ஆஸ்திரேலியா மறுசுழற்சி பொருளாதாரம் (ஐ-ஏசிஇ) போட்டி’ நடைபெற்றது. அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை இணைந்து இப்போட்டியை நடத்தின.

    இப்போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த போட்டியின் வாயிலாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து புதுமையான தீர்வுகள் கிடைத்துள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் மறுசுழற்சி பொருளாதார தீர்வுகளை முன்னெடுப்பதில் நம் நாடுகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த யோசனைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவது பற்றி நாம் இப்போது ஆராய வேண்டும்.

    மறுசுழற்சி பொருளாதாரத்தின் கருத்து, நமது பல பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒரு முக்கிய படியாக இருக்கும். மறுசுழற்சி, மறுபயன்பாடு, கழிவுகளை அகற்றுவது மற்றும் வளங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை நம் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

    கொரோனா தொற்றுக்கான இந்தியாவின் தீர்வுகள் ஒட்டுமொத்த உலகிற்கே உந்துசக்தியாக திகழ்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே வலிமையான உறவு முக்கிய பங்கு வகிக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×