search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் குன்னுமல்
    X
    சரத் குன்னுமல்

    துபாய் லாட்டரியில் கேரள இளைஞருக்கு ரூ. 7 கோடி பரிசு

    துபாய் லாட்டரியில் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு முதல் பரிசான ரூ.7 கோடி பரிசு கிடைத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சரத் குன்னுமல் (வயது 26). இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தன் நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து துபாய் லாட்டரி சீட்டு வாங்கினார். இந்த லாட்டரி குலுக்கல் முடிவு வெளியானது. இதில் முதல் பரிசாக 10 லட்சம் டாலர் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 கோடி ஆகும்.

    லாட்டரி சீட்டில் பரிசு பெற்ற சரத் குன்னுமல் கூறும்போது, நான் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு முதல் பரிசு தொகை கிடைக்கும் என நினைக்கவில்லை. இந்த பரிசை எனது நண்பர்கள் 9 பேருடன் பகிர்ந்து கொள்வேன். மேலும் என் வயதான பெற்றோரின் மருத்துவ செலவுகளுக்காகவும் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.
    Next Story
    ×