search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது

    ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் இந்த விலை உயர்வு நீடித்தது.

    நேற்றுமுன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அன்றைய தினம் அங்கு ரூ.100.13-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று 36 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.49-க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் ரூ.92.47-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது.

    அதன்படி நேற்று அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 32 பைசாவும் அதிகரித்தது.

    இதன் காரணமாக மத்தியபிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.25-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.35-க்கும் விற்பனையானது.

    விலை உயர்வால் நேற்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.89.88 ஆகவும், டீசல் ரூ.80.27 ஆகவும் விற்கப்பட்டது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96.32-க்கும், டீசல் லிட்டர் ரூ.87.32-க்கும் விற்பனையானது.
    Next Story
    ×