search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கல்யாண கர்நாடகத்தில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மந்திரி சுரேஷ்குமார் தகவல்

    கல்யாண கர்நாடக பகுதியில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பாவை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார். பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்கள் குறித்து சுரேஷ்குமார் எடுத்துக் கூறினார். அதன் பிறகு சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி ஆணையம் அமைக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். 50 ஆண்டுகள் பழமையான 14 ஆயிரத்து 613 தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் மற்றும் 634 அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்குமாறு கேட்டுள்ளேன்.

    நூலகங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு இணையாக கர்நாடகத்தில் 276 அரசு பப்ளிக் பள்ளிகளை தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 79 சதவீதம் ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளத்திற்கு போய்விடுகிறது. மீதமுள்ள 21 சதவீத நிதி தான் கல்வி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    பள்ளி கல்வித்துறையின் கீழ் 5,459 பள்ளி-கல்லூரிகள் உள்ளன. இதில் 1 கோடியே 1 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள். கல்யாண கர்நாடக பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி ஒதுக்குமாறு முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம்.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×