search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சணல்குமார்
    X
    சணல்குமார்

    கேரளாவில் மின் இணைப்பை துண்டித்ததால் தற்கொலை செய்த தொழிலாளி

    கேரளாவில் மின் இணைப்பை துண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள பெருங்கிடவிளா தோட்ட வாரம் பகுதியை சேர்ந்தவர் சணல்குமார் (வயது39). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாசியான இவர், கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருங்கிடவிளா பகுதியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தனக்கு வாய்ப்பு தருமாறு கட்சியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு பதில் சுரேந்திரன் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இதனையடுத்து சணல் குமார் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று சுரேந்திரன் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனையும் மீறி சணல்குமார் போட்டியிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சணல்குமார் கடந்த 4மாதமாக தனது வீட்டிற்கு மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததாக கூறுப்படுகிறது. அவர் மேலும் ரூ.1,496 மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டியிருந்தது.

    இதனால் அவரது வீடு மின் இணைப்பு கடந்த 2நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. அதில் மன வேதனையடைந்த சணல்குமார் தீக்குளித்தார். இதையடுத்து பெருங்கிடவிளா தாலுகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் இறப்பதற்கு முன்புஅவரிடம் இருந்து மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் தனக்கும், சுரேந்திரன் என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அந்த விரோதத்தில் அவர் கூறியதன்பேரில் எனது வீட்டில் மின் இணைப்பை துண்டித்துவிட்டனர்.

    இதனால் நான் மனம் உடைந்து தீக்குளித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். சணல்குமார் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சணல்குமாரின் குற்றச்சாட்டுக்கு மின்வாரிய அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. “4மாதமாக மின்கட்டணம் செலுத்தாவிட்டால் யார் வீட்டு மின் இணைப்பு என்றாலும் துண்டிக்க தான் செய்வோம். அதைத்தான் செய்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளது.

    அதேபோல் சுரேந்திரனும், தனக்கும் சணல்குமார் வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×