search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நான்கு மணி நேர ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு: 20 ஆயிரம் போலீசார் குவிப்பு

    நாடுதழுவிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மத்திய அரசுடன் 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். ஆனால் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. எல்லையில் போராடி வரும் நிலையில் அவ்வப்போது குறிப்பிட்ட சில மணி நேரங்கள் நாடுதழுவிய ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவித்து வருகின்றனர். டிராக்டர் பேரணி, சாலை மறியல் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் நாளை நாடுதழுவிய ரெயில் போராட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என சம்யுக்தா கிஷான் மோர்சா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால் நாளை மேற்கு வங்காளத்துடன் மேற்கொண்ட மூன்று மாநிலங்களில் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது ரெயில்வே நிர்வாகம். ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் 20 கூடுதல் கம்பெனிகளை (சுமார் 20 ஆயிரம் போலீசார்) குவித்துள்ளது.
    Next Story
    ×