search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென் ஆப்பிரிக்கா கொரோனா இந்தியாவில் பரவல் - 4 பேருக்கு பாதிப்பு

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு தென் ஆப்பிரிக்க வைரஸ் தாக்கம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல்களை பற்றிய தகவல்கள் வெளிவந்தன.

    இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் அங்கிருந்து இங்கு வந்த இந்தியர்கள் சிலருக்கு பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இப்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    அங்கோலா, தான்சானியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு தென் ஆப்பிரிக்க வைரஸ் தாக்கம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று பிரேசிலில் இருந்து இந்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பிய ஒருவருக்கு பிரேசில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா தெரிவித்தார்.
    Next Story
    ×