search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    குண்டுவெடிப்பு சம்பவம்- இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு நபரை இறக்கிவிட்ட டாக்சி டிரைவரிடம் விசாரணை

    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 2 நபர்களை டாக்சியில் இருந்து இறக்கி விட்ட டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நடந்தது. குறைந்த சக்தி கொண்ட அந்த குண்டு வெடித்ததில் உயிரிழப்போ, பெரிய அளவில் யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த குண்டு சாலையில் இருந்த பூ தொட்டியில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் டாக்சியில் வந்து இறங்கி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த டாக்சி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இரண்டு நபர்களின் அடையாளம் மற்றும் ஏதாவது பேசினார்களா? எந்த மொழியில் பேசினார்கள் போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

    இருகுறித்து உயர் போலீசார் அதிகாரி ஒருவர் கூறுகையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சில மாதிரிகளை சேகரித்துள்ளனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். பெரும்பாலான கேமராக்கள் இயங்காமல் இருந்துள்ளது. இதனால் அதில் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை என்றார்.

    இதற்கிடையே இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மலகா கூறும்போது, இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. இந்திய அதிகாரிகள் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
    Next Story
    ×