search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    கவனக்குறைவால் வீணான 5 ஆயிரம் தடுப்பூசிகள் -குப்பையில் வீசப்பட்டன

    5 மாநிலங்களில் நடைமுறையில் குளறுபடி ஏற்பட்டதால் சுமார் 5 ஆயிரம் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் பயன்படுத்தப்படாததால் வீணாக போய் விட்டது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 16-ந்தேதி முதல் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற அந்த 2 தடுப்பூசிகளையும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வினியோகம் செய்து தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் 2 மாதங்களுக்குள் சுமார் 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்து விட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு முன்கள பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வரவில்லை.

    தடுப்பூசிகளை சேமிப்பு கிடங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பிறகு 4 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். ஆனால் 5 மாநிலங்களில் இத்தகைய நடைமுறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இந்த 5 மாநிலங்களிலும் சுமார் 5 ஆயிரம் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் பயன்படுத்தப்படாததால் வீணாக போய் விட்டது. அந்த 5 ஆயிரம் தடுப்பூசிகளையும் குப்பையில் வீசி உள்ளனர். ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்காளம், இமாச்சல பிரதேசம், காஷ்மீர், கேரளா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மிக சிறப்பாக பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×