என் மலர்

  செய்திகள்

  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி
  X
  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி

  முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
  புதுடெல்லி:

  விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிப்பது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்து அறிவித்துள்ளன. இதையொட்டி மத்திய அரசின் சார்பில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

  ஜனாதிபதி உரையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


  எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது தெரிவிக்கலாம்.

  ஜனாதிபதி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எதிர்க்கட்சியாக பா.ஜ.க. இருந்தபோது, ஒருபோதும் ஜனாதிபதி உரையை புறக்கணித்தது இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×