search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரவ் பாட்டியா
    X
    கவுரவ் பாட்டியா

    ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம்

    ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15-ம்தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ம்தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், “நாங்கள் 16 அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறோம், நாங்கள் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதியின் உரையை புறக்கணிக்கிறோம். விவசாய மசோதாக்களை (புதிய வேளாண் சட்டங்கள்) எதிர்க்கட்சி இல்லாமல் பலவந்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுதான், இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்” என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் எதிர்கட்சிகளின் முடிவுக்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டி கூறுகையில் ‘‘எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நெருக்கடி கொடுத்தால் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுவிடும் என நினைத்தனர். அத்தகைய வலிமைய எதிர்க்கட்சிகள் பெறவில்லை என்பதையும், மக்களுக்காக மட்டுமே தலைவணங்கும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அனைத்து முக்கியமான எதிர்க்கட்சிகள் கடந்த செசனில் எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேறியதாக கூறுகிறார்கள். இந்த முடிவால் அவர்கள் காட்டியிருப்பது அவர்களின் அரசியலமைப்பு மற்றும் தார்மீக திவால்நிலைதான்.

    சிவசேனா இந்த சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது. பின்னர், யு-டர்ன் ஆகியது. அதேபோல்தான் ஷிரோமணி அகாலி தளம்.

    விவசாயிகள் போராட்டத்தின்போது தேசியக்கொடியை அவர்கள் அவமதித்ததற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. சில எதிர்கட்சிகள் வன்முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் மறுக்க மறுப்பது அதற்கு ஒரு காரணியாக இருந்தது என்கிறார்கள்.

    மத்திய அரசு அனைத்து விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் இருந்தது. டெல்லி போலீசார் அனைத்தையும் சிறந்த முறையில் கையாண்டனர்’’ என்றார்.
    Next Story
    ×