என் மலர்

    செய்திகள்

    போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
    X
    போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

    டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
    புதுடெல்லி:

    டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    செங்கோட்டையை சுற்றியுள்ள போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் செங்கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

    இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

    டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×