என் மலர்
செய்திகள்

ஹெராயின் (கோப்புப்படம்)
டெல்லி விமான நிலையத்தில் ரூ. 68 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: உகாண்டா நட்டினர் இருவர் கைது
டெல்லி விமான நிலையத்தில் ரூ. 68 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தோஹா வழியாக உகாண்டாவைச் சேர்ந்த இருவர் என்டேபெப்பில் இருந்து வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பேக்கில் சந்தேகம் படக்கூடிய அளவில் மர்ம பொருட்கள் இருந்தது.
அதை விமான சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பரிசோதனையில் அது ஹெராயின் எனத் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். 51 பாக்கெட்டுகளை கொண்ட அவற்றின் எடை சுமார் 9.8 கிலோ இருந்தது. அவற்றின் மதிப்பு 68 கோடி ரூபாயாகும்.
Next Story