search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செல்போனில் முடங்கிய யூடியூப் உள்பட கூகுள் செயலிகள் : பயனாளர்கள் அவதி

    உலகின் பல்வேறு பகுதிகளில் செல்போனில் யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் செயலி முடங்கியுள்ளது.
    வாஷிங்டன்:

    உலக அளவில் வலைதளத்தில் முதன்மையான நிறுவனம் கூகுள்.  அந்நிறுவனம் யூட்டியூப், ஜிமெயில், ஜிபே, குகூள் மேப் உள்பட பல்வேறு செயலிகளை பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது.

    உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தினமும் செல்போன் மூலமாகவும், கணிணி மூலமாகவும் குகூள் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் செல்போனில் கூகுள் செயலிகள் அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதனால், பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதையடுத்து, குகூள் நிறுவனம் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பின்னர் உலகம் முழுவதும் செல்போனில் குகூள் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது.
    Next Story
    ×