search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் 5 ஏக்கரில் புனித நந்தவனம்

    திருப்பதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நந்தவனத்தில் பலவகையான மரங்களை நட்டு பராமரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக தனியார் அமைப்புடன் தேவஸ்தானம் இணைந்து பணியாற்ற உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    திருமலையில் தேவஸ்தானம் 100 ஏக்கர் பரப்பளவில் சந்தன மரங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறது. ஏழுமலையான் கைங்கரியத்துக்கு சந்தனம் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏழுமலையானுக்கு தேவைப்படும் சந்தன மரங்களை திருமலையில் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அந்த மரங்கள் நன்றாக வளர்ந்து வருகின்றன. அவற்றின் பாதுகாப்புக்காக வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 10 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள், அரளிச்செடி, பாரிஜாதம் எனப்படும் பவழமல்லி, காட்டு மல்லி, துளசி, நெல்லி, வன்னி, தர்ப்பை, அரச மரங்கள், ஆலமரங்கள் ஆகியவையும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் புனிதமான மரங்களை வளர்க்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

    அதன்படி கருடாத்ரி நகர் சோதனை சாவடி அருகில் உள்ள கீதாவனத்திலும் பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நந்தவனத்திலும் மரங்களை நட்டு பராமரிக்க உள்ளது. இதற்காக தனியார் அமைப்புடன் தேவஸ்தானம் இணைந்து பணியாற்ற உள்ளது.

    திருமலையில் மின்சார தேவைக்காக தர்மகிரி வேத பாடசாலை பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கு தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×