search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    சித்தூர் மாவட்டம் கிராம பகுதியில் திடீர் நிலநடுக்கம்

    சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசமுத்திரம் அடுத்த காப்பலியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    திருமலை:

    சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசமுத்திரம் அடுத்த காப்பலியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மேலும் பூமியின் அடியிலிருந்து பயங்கரமான ஒலி எழுந்துள்ளது. அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பீதியடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வீதிகளில் தஞ்சமடைந்தனர். நில நடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பெய்த மழை காரணமாக பொரபண்டா, கச்சிபவுலி உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டதுடன் பயங்கர சப்தங்களும் எழுந்தன.

    இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள் மழை காரணமாக பூமியின் அடிப்பகுதியில் உள்ள அடுக்குகளில் நீர் நிறைந்துள்ளது. அவற்றின் அசைவால் இதுபோன்ற சப்தங்கள் எழும் என்று தெரிவித்தனர்.

    கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கும் பூமியின் அடியில் மழைநீர் சென்று நிறைந்ததால் இதுபோன்ற ஒலிகள் எழுந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சித்தூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சின்ன உப்பரபள்ளி, எல்லப்பள்ளி, கம்பள்ளி, நஞ்சம்பேட்டை உள்ளிட்ட 6 கிராமங்களில் இரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தற்போது மீண்டும் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காப்பலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது.
    Next Story
    ×