search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்னாப் கோஸ்வாமி
    X
    அர்னாப் கோஸ்வாமி

    அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீனா, போலீஸ் கஸ்டடியா? -அலிபாக் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

    அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக கஸ்டடி தொடர்பான மனு மீது தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
    புதுடெல்லி:

    2018ம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து அர்னாப் சார்பில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அர்னாப் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். 2018ல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், மறு விசாரணையில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் வாதாடினார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

    அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட், ஒரு மாநிலம் இதுபோன்று ஒரு நபரை குறிவைத்தால் கடும் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

    இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக ராய்காட் போலீஸ் தாக்கல் செய்த மனு மீது அலிபாக் நீதிமன்றம் நேற்று  விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அர்னாப்பின் ஜாமீன் மனு மீது 11ம் தேதி (இன்று) விசாரணை நடைபெறும் என்றும், 12ம் தேதி கஸ்டடி குறித்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்றும்  நீதிமன்றம் தெரிவித்தது.

    அப்போது அர்னாப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 12ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. கஸ்டடி குறித்த தீர்ப்பும் அப்போது வழங்கப்படும் என கூறியது.
    Next Story
    ×