search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேஜஸ்வி யாதவ் - நிதிஷ் குமார்
    X
    தேஜஸ்வி யாதவ் - நிதிஷ் குமார்

    பீகார்: ஆரம்பம் முதலே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி முன்னிலை

    பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

    பீகார் தேர்தலில் தற்போதைய முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    இதேபோல் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி சிரங் பாஸ்வான் தலைமையில் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 முதல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள கூட்டணியின் நிலவரம் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. 

    அதன்படி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி 79 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 52 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

    லோக் ஜனசக்தி உள்ளிட்ட இதர கட்சிகள் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த முன்னிலைகள் அனைத்தும் தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் வெளியான முதல்கட்ட தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×