search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மின் திட்டப் பணிகள்
    X
    நீர்மின் திட்டப் பணிகள்

    சட்லெஜ் நதியில் நீர்மின் திட்டம்- ரூ.1810 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    குறிப்பாக, சட்லெஜ் நதியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் லுஹ்ரி ஸ்டேஜ் -1 நீர் மின் திட்டத்திற்காக ரூ.1810 கோடி முதலீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. லூஹ்ரி நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைக்கப்பட உள்ள இந்த மின் நிலையத்தை, 62 மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால், ஆண்டுதோறும் 6.1 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வழிவகுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல், சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொலைத்தொடர்பு / தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    Next Story
    ×