search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

    பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றுகிறார்.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பல்கலைக்கழகம் 1916- ம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி நிறுவப்பட்டது. இது நாட்டின் ஆறாவது மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகும்.

    மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் திவான் சர் எம்.வீ. விஸ்வேஸ்வரையா ஆகியோரால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

    இந்நிலையில், மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

    கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொள்வர்.
    Next Story
    ×