search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படை வீரர்
    X
    பாதுகாப்பு படை வீரர்

    காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - டிஜிபி தகவல்

    ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை பயங்கரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள் என மொத்தம் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தில் இருந்தே யூனியன் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தங்கள் நாட்டில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளை எல்லைவழியாக பாகிஸ்தான் காஷ்மீருக்கு அனுப்பி வருகிறது.

    மேலும், காஷ்மீரில் உள்ள இளைஞர்களை தவறான வழியை தேர்ந்தெடுத்து பங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறக்கியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக டிஜிபி தில்பக் சிங் கூறியதாவது:-

    காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 75 ஆபரேஷன்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் என மொத்தம் 138 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    குறிப்பாக கடந்த 5 நாட்களில் 4 ஆப்ரேஷன்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். டோஹா பகுதியை சேர்ந்த 1 பயங்கரவாதி சரணடைந்துள்ளான். 

    இன்று நடந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியுமான ஷைபுல்லா கொல்லப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட பயங்காவாதி பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழக்க காரணமானவன்.

    என்றார். 
    Next Story
    ×