search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாய் பராமரிப்பாளர் பணி
    X
    நாய் பராமரிப்பாளர் பணி

    நாய் பராமரிப்பு வேலைக்கு பட்டதாரிகளை அழைத்த ஐ.ஐ.டி.

    பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கூறி இருந்தது.
    புதுடெல்லி:

    புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி ஐ.ஐ.டி.


    இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதுடன், வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை நாய் பராமரிக்க அழைப்பதாக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததால் ஐ.ஐ.டி. நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்ததுடன், அந்த விளம்பர அறிவிப்பை திரும்ப பெறுவதாக கூறி இருக்கிறது.

    ‘‘நாய் பராமரிப்பாளர் பணியானது, இளநிலை கால்நடை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கானது. ஆனால் வெளியான அறிவிப்பில், வேறு ஒரு பணி அறிவிப்புக்கான இளநிலை பட்டப்படிப்பு தகுதிகள் தவறுதலாக நகல் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுவிட்டது. ஐ.ஐ.டி. வளாகத்திற்கு கொண்டுவரப்படும் தெருநாய்களை பராமரித்தல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ‘நாய் பராமரிப்பாளர்’ பணியிடங்கள் நிரப்பப்படும். தவறான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு, இதற்காக வேறு புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×