search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாந்த் பூஷண்
    X
    பிரசாந்த் பூஷண்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து உச்ச நீதிமன்றம் புதிய முடிவு எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவருக்கான தண்டனை குறித்து ஆகஸ்ட் 20ல் அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அதன்பின்னர் பிரசாந்த் பூஷண் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிரசாந்த் பூஷன் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தண்டனை தொடர்பான வாதங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, பிரசாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும், அவரது சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே நிறைவேற்றப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×